பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. வாழப்பாடி, காட்டுவேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த, 35 வயது தாய், 18, 16 வயது மகள்கள், இரு நாளுக்கு முன், மஹாராஷ்டிராவில் இருந்து வந்தனர். அவர்களை, தனிமை மையத்தில் வைத்து பரிசோதனை செய்தனர். நேற்று, மூவருக்கும் தொற்று உறுதியானது. அவர்கள், பெரியகிருஷ்ணாபுரம் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தனலட்சுமி நகரைச் சேர்ந்த, 47 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், நான்கு பேருக்கு தொற்று உறுதியானது.


தாய், மகனுக்கு உறுதி: மகுடஞ்சாவடி அருகே, கூடலூர் ஊராட்சி, மாமரத்துக்காட்டைச் சேர்ந்தவர், 52 வயது ஆண்; மூட்டை தூக்கும் தொழிலாளி. கடந்த, 29ல், இவருக்கு தொற்று ஏற்பட்டு, காகாபாளையம், நாலெட்ஜ் கல்லூரி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது, 45 வயது மனைவி, 30 வயது மகனும், அதே மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X