குணமடைந்த 17 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குணமடைந்த 17 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

Added : ஆக 02, 2020
Share

ஆத்தூர்: பெரியகிருஷ்ணாபுரத்தில், குணமடைந்த, 17 பேரை, மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆத்தூர், பெரியகிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி, 'கொரோனா' சிகிச்சை மையமாக செயல்படுகிறது. அங்கு, 65 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, 53 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த, 24ல், தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட, நரசிங்கபுரம், ஈச்சம்பட்டி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், தலைவாசலைச் சேர்ந்த, 17 பேர் குணமடைந்தது, நேற்று முன்தினம் தெரியவந்தது. அவர்களுக்கு, ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் செல்வக்குமார், ஆரியபாளையம் மருத்துவ அலுவலர் சம்பத்குமார் ஆகியோர், ஒரு மாதத்துக்கு தேவையான மருந்து, மாத்திரை, கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட, 'ஆரோக்கியசேது' பெட்டகம், பழங்கள் வழங்கி, வீட்டுக்கு அனுப்பினர். அத்துடன், மேலும், 14 நாள் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். இம்மையத்தில், மீதி, 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


புரோட்டா கேட்டு போராட்டம்: பெரியகிருஷ்ணாபுரம் கொரோனா சிகிச்சை மையத்தில், நேற்று, 15 பேர், 'புரோட்டா' வழங்கும்படி கேட்டனர். அதனால், மருத்துவ குழுவினர், தங்கியுள்ள, 53 பேருக்கும், புரோட்டா வழங்க ஏற்பாடு செய்தனர். பலர், 'புரோட்டா வேண்டாம்; வழக்கமான உணவு வேண்டும்' எனக்கூறி போராட்டம் நடத்தினர். மருத்துவக்குழு, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, வேறு உணவு வழங்க, ஏற்பாடு செய்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X