போலி ரசீது மூலம் அபராதம் வசூல்: மாநகராட்சி மீது தி.மு.க., குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலி ரசீது மூலம் அபராதம் வசூல்: மாநகராட்சி மீது தி.மு.க., குற்றச்சாட்டு

Added : ஆக 02, 2020
Share

சேலம்: தி.மு.க., மாநில தேர்தல் பணிக்குழு செயலர் ராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவால் மக்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு தெளிவாக இல்லை. முதல்வர், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குழப்பம் உள்ளது. மாவட்டத்தில், அபராதம் பெயரில், மக்கள் பணம் பெரிய அளவில் கொள்ளைப்போகிறது. வியாபாரிகள், விவசாயிகளின் பொருட்களை சேதப்படுத்துவது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வாடிக்கையாகிவிட்டது. அதை பயன்படுத்தி, போலி நபர்கள் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். போலி ரசீது மூலம், அபராதம் வசூலிப்பது, மக்களுக்கே தெரியவில்லை. எதன் அடிப்படையில், அபராதம் வசூலிக்கப்படுகிறது என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரப்பட்டுள்ளது. உரிய தகவலை தெரியப்படுத்தாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X