முழுமையாக கொள்முதல் செய்யக்கோரி பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முழுமையாக கொள்முதல் செய்யக்கோரி பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்

Added : ஆக 02, 2020
Share
மொரப்பூர்: முழுமையாக கொள்முதல் செய்யக்கோரி, மொரப்பூரில் பாலை கொட்டி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம், பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனம், முழுமையாக கொள்முதல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள்,

மொரப்பூர்: முழுமையாக கொள்முதல் செய்யக்கோரி, மொரப்பூரில் பாலை கொட்டி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம், பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனம், முழுமையாக கொள்முதல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் மொரப்பூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம் எதிரில், நேற்று காலை பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: விவசாயம் பாதித்த நிலையில், பால் வருமானத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். ஊரடங்கை காரணம் கூறி, ஆவின் நிறுவனம் பாலை முழுமையாக கொள்முதல் செய்யாததால், வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. நாளொன்றுக்கு விவசாயி ஒருவர், 10 லிட்டர் பால் கொண்டு வந்தால், ஒன்பது லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். மீதமுள்ள, ஒரு லிட்டர் பாலை திருப்பி கொடுத்து விடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, எவ்வித முன்னறிவிப்பின்றி, பால் கூட்டுறவு சங்கம் மூடப்பட்டதால், தெருத்தெருவாக சென்று, விவசாயிகள் பாலை விற்றனர். பால் விலையை குறைத்துள்ள நிலையில், தீவனத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனவே, முழுமையாக பால் கொள்முதல் செய்வதுடன், குறைக்கப்பட்ட விலையை உயர்த்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X