பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் கட்டுக்குள் வரும் கொரோனாவால் மக்கள் நிம்மதி

Added : ஆக 02, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால், மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் ஏப்.,23 வரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் மூலம், மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. மாவட்ட நிர்வாகம், அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து,

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால், மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டத்தில் ஏப்.,23 வரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் மூலம், மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. மாவட்ட நிர்வாகம், அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து, கொரோனா பரவலை தடுக்க, தேவையான நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், இதற்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, சில அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த, 26ல், 130 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, விழித்து கொண்ட மாவட்ட நிர்வாகம், கொரோனா தொற்றை தடுக்க அனைத்துதுறை அதிகாரிகளையும் முனைப்புடன் செயல்பட நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம், இருவர் மட்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று நேற்றும் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்த தர்மபுரியை சேர்ந்த, 54 வயது ஆசிரியை, அன்னசாகரத்தை சேர்ந்த, 42 வயது துணி வியாபாரி மட்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X