தர்மபுரி மாவட்டத்தில் தொடரும் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்டத்தில் தொடரும் மழை

Added : ஆக 02, 2020
Share

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், நேற்று காலை, 8:00 மணி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதும், அதிகபட்சமாக ஒகேனக்கல், 6 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, பென்னாகரத்தில், 2 என, மாவட்டத்தில் மொத்தம், 8 மி.மீ., மட்டும் மழை பதிவானது. இந்நிலையில் நேற்று காலை முதல், வானம் மேகத்துடன் காணப்பட்டதுடன், பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தர்மபுரியில் மாலை, 3:20க்கு பெய்ய துவங்கிய கனமழை, 3:50 வரை கொட்டி தீர்த்தது. இதனால், நகரில் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X