பொது செய்தி

தமிழ்நாடு

மணல் குவியல் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கம்பைநல்லூர்: கம்பைநல்லூர் அருகே பதுக்கிய, நூற்றுக்கணக்கான யூனிட் மணலை, போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட கனிம வளத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த பெரமாண்டப்பட்டி - அக்ரஹாரம் இடையே, தென்பெண்ணையாற்றின் குறுக்கே, 11.60 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் கட்டுமான பணி நடக்கிறது. அங்கிருந்து, அக்ரஹாரத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம், மணலை கடத்திச்சென்று, அதை தங்களுக்கு சொந்தமான வீடு மற்றும் விவசாய நிலத்தில் பதுக்கி வைத்துள்ளனர். தகவலின்படி, நேற்று காலை, 11:00 மணிக்கு, தர்மபுரி கனிம வளத்துறை இணை இயக்குனர் ஜெயபால், ஆர்.டி.ஓ., தணிகாசலம் (பொறுப்பு), காரிமங்கலம் தாசில்தார் கலைச்செல்வி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு, பதுக்கி வைத்திருந்த மணலை, டிப்பர் லாரிகளில் ஏற்றி, கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.


400 யூனிட் மணல்: மணலை பறிமுதல் செய்ய நேற்று முன்தினம், அக்ரஹாரத்துக்கு குறைந்தளவு போலீசாருடன், கனிம வளத்துறையினர் சென்றுள்ளனர். மணல் பதுக்கியவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் திரும்பினர். இதையடுத்து, நேற்று இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி(கம்பைநல்லூர்), கண்ணன் (அரூர்) ஆகியோர் தலைமையில், 60க்கும் மேற்பட்ட போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மணல் பறிமுதல் செய்யும் பணி முடிவடைய, இரண்டு முதல், மூன்று நாட்கள் ஆகும் எனவும், பதுக்கி வைத்துள்ள மணல், 400 யூனிட்டுக்கு மேல் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பல மாதங்களாக நடந்து வந்த இந்த மணல் திருட்டு குறித்து, வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X