தொழிலாளியை கொல்ல முயற்சி: நண்பர் உட்பட இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை கொல்ல முயற்சி: நண்பர் உட்பட இருவர் கைது

Added : ஆக 02, 2020
Share
ஓசூர்: ஓசூர் அருகே, தொழிலாளியை கொல்ல முயன்ற நண்பர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ராயக்கோட்டை அடுத்த லிங்கனம்பட்டி அருகே நடுகாலம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் கோவிந்தன், 20. கூலித்தொழிலாளி; இவரும், அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி மாதேஷ், 25, என்பவரும் நண்பர்கள். கடந்த, 30 இரவு, கோவிந்தனை மொபைல்போனில் அழைத்த மாதேஷ், ஒன்னல்வாடி பஸ் நிறுத்தம் அருகே வர கூறியுள்ளார்.

ஓசூர்: ஓசூர் அருகே, தொழிலாளியை கொல்ல முயன்ற நண்பர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ராயக்கோட்டை அடுத்த லிங்கனம்பட்டி அருகே நடுகாலம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் கோவிந்தன், 20. கூலித்தொழிலாளி; இவரும், அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி மாதேஷ், 25, என்பவரும் நண்பர்கள். கடந்த, 30 இரவு, கோவிந்தனை மொபைல்போனில் அழைத்த மாதேஷ், ஒன்னல்வாடி பஸ் நிறுத்தம் அருகே வர கூறியுள்ளார். இதனால் கோவிந்தன் அங்கு சென்றார். அப்போது, மாதேஷ் மற்றும் அவரது தரப்பினர், கோவிந்தனை கழுத்தில் வெட்டி உள்ளனர். காயமடைந்த கோவிந்தன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கோவிந்தனின் தந்தை முனியப்பன், 50, ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணையில், முனியப்பனுக்கும், அவரது தம்பி லட்சுமணன், 40, என்பவருக்கும் இடையே, குடும்ப சொத்தை பிரிப்பது தொடர்பாக, பிரச்னை இருந்து வருவதும், ராயக்கோட்டை போலீசில், இரு தரப்பிலும் அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. நிலப்பிரச்னையால்தான், முனியப்பன் மகன் கோவிந்தன் தாக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, கோவிந்தனை வெட்டியதாக, மாதேஷ் மற்றும் லட்சுமணன் ஆகியோரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X