கந்த சஷ்டி கவசத்தின் மகத்துவத்தை விளக்க வீடுதோறும் வெற்றிவேல், வீரவேல் ஸ்டிக்கர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி கவசத்தின் மகத்துவத்தை விளக்க வீடுதோறும் 'வெற்றிவேல், வீரவேல்' ஸ்டிக்கர்

Added : ஆக 02, 2020
Share

கிருஷ்ணகிரி: 'கருப்பர் கூட்டம் யூ டியூப்' சேனலில், கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ பதிவு வெளியானது. இதற்கு, ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, 'கருப்பர் கூட்டம் யூ டியூப்' சேனல் நிர்வாகி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கந்தசஷ்டி கவசத்தின் மகத்துவத்தை விளக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகரில் உள்ள சென்னை சாலையில், தொன்னையான்கொட்டாயில், பா.ஜ., இளைஞரணி மாநில துணைத்தலைவியும், சந்தன வீரப்பனின் மகளுமான வித்யாராணி தலைமையில், வீடுகள்தோறும் 'வெற்றிவேல், வீரவேல்' ஸ்டிக்கர்கள் நேற்று ஒட்டப்பட்டன. மேலும், கந்த சஷ்டி கவசம் குறித்து, மக்களுக்கு விளக்கப்பட்டது. முருகர் வேடமணிந்த சிறுவர்கள், வீடுகள்தோறும், கந்த சஷ்டி கவச பாடல்களை பாடிச் சென்றனர். இதுகுறித்து, வித்யாராணி கூறுகையில், ''கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், 25 ஆயிரம் வீடுகளில், 'வெற்றிவேல், வீரவேல்' ஸ்டிக்கர் ஓட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கந்த சஷ்டி கவசம் மற்றும் ஹிந்து கடவுள்களை அவதூறாக பேசியவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X