பொது செய்தி

தமிழ்நாடு

'ரசீது இல்லாமல் விதை விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை'

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஓசூர்: ''விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்காமல், விதை விற்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன் எச்சரித்துள்ளார்.


சூளகிரியில் தரமற்ற விதை மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யப்படுவதால், மகசூல் பாதிப்பதாக, விவசாயிகள் புகார் கூறினர். இதையடுத்து, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், விவசாயிகள் மத்தியில் பேசியதாவது: மண் சத்தை அறிந்து, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். சூளகிரியில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ளது. கால்சியம், போரான், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளது. நடமாடும் மண் ஆய்வு கூடத்தில், விவசாயிகள் தங்கள் நில மண்ணை ஆய்வு செய்ய வேண்டும். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 600க்கும் மேற்பட்ட விதை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் நர்சரி பண்ணைகள் உள்ளன. தற்போது, நல்ல மழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் நாற்றுகள், விற்பனை செய்யப்படுகிறது. கோவை, விதைச்சான்று இயக்குனரிடம் பதிவு செய்த விதைகளையே, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விதை விற்பனையாளர்கள், விவசாயி அல்லது விற்பனை உரிமம் பெற்ற நர்சரிகளுக்கு மட்டுமே, விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விதைகள் இருப்பு, விற்பனை விலை ஆகிய விபரங்கள் அடங்கிய, விற்பனை பலகை வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்த ரசீது வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனை உரிமம் பெறாமல், விதை மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் நர்சரி பண்ணைகள் மீது, சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்று தரப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X