பொது செய்தி

தமிழ்நாடு

கெலமங்கலத்தில் 52 'சிசிடிவி' கேமரா பொருத்தம்: பொதுமக்கள் பங்களிப்புடன் போலீசார் ஏற்பாடு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் டவுன் பகுதியில், குற்ற சம்பவங்களை தடுக்க, பொதுமக்கள் பங்களிப்புடன், 52 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்., பகுதிகளில், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, கைது செய்யும் வகையில், கெலமங்கலம் போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 52 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கெலமங்கலம் சுல்தான்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் ஜங்ஷன், பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில், பட்டாளம்மன் கோவில் தெரு, ஜிபி, துளசி நகர், கணேசா காலனி, அண்ணா நகர், ஜீவா நகர், கெலமங்கலம் நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 39 'சிசிடிவி' கேமராக்களின் பதிவுகளை, கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவாறு பார்க்க, வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள, 13 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்க்க, கெலமங்கலம் அரசு பள்ளி மற்றும் கெலமங்கலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், கேமரா பயன்பாட்டை நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கீதா, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன், கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X