பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில் பூமி பூஜை: அத்வானி, ஜோஷிக்கு போனில் அழைப்பு

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
RamTemple, Advani, Joshi, Invite, ராமர் கோயில், பூமிபூஜை, அத்வானி, ஜோஷி, அழைப்பு

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த போராட்டத்தில், தீவிரமாக ஈடுபட்டவர்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு பெரும் பங்கு உண்டு.

அயோத்தியில் கோவில் கட்ட வலியுறுத்தி, கடந்த, 1990ல், அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க, அயோத்தி பேராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என, அறக்கட்டளை தெரிவித்திருந்தது. பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, தகவல் வெளியானது, இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், அத்வானி, ஜோஷிக்கு, டெலிபோனில் அழைப்பு விடுக்கப்படும் என, அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறுகையில், ''அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதற்கான விலையை, நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அடிக்கல் நாட்டு விழாவில், நிச்சயம் பங்கேற்பேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
02-ஆக-202016:19:46 IST Report Abuse
வெகுளி அத்வானி ஜோஷி போன்றவர்கள் நிச்சயம் அழைக்கப்பட வேண்டும்... சுமூகமான தீர்ப்புக்கு உதவிய இசுலாமிய பெரியோர்களையும் அழைக்கலாம்..... ஒற்றுமையே பலம்.....
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-ஆக-202015:25:02 IST Report Abuse
பாமரன் என்ன செய்ய விதீஈஈஈஈஈஈ வலியதூஊஊஊஊஊ.....
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
02-ஆக-202015:15:26 IST Report Abuse
vnatarajan அன்று அத்வானி ஜோஷி, உமா பாரதி போன்றவர்கள் போராடவில்லை யென்றால் இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி போட முடிந்திருக்குமா என்பது சந்தேகமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X