பொது செய்தி

தமிழ்நாடு

குறு, சிறு நிறுவனங்களின் அளவுகோல் திருத்தியமைப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, வகைப்படுத்தும் அளவு கோல், திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான அளவுகோல், கடந்த ஜூலை, 1ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி, இயந்திரங்கள் அல்லது உபகரணங்களின் முதலீடு, ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமலும், விற்று முதல், ஐந்து கோடி ரூபாய்க்கு மிகாமல் இருப்பின், அது குறு நிறுவனம். இயந்திரங்கள் அல்லது உபகரணங்களின் முதலீடு, 10 கோடி ரூபாய்க்கு மிகாமலும், விற்று முதல், 50 கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருப்பின், அது சிறு நிறுவனம். இயந்திரங்கள் அல்லது உபகரணங்களின் முதலீடு, 50 கோடி ரூபாய்க்கு மேற்படாமலும், விற்று முதல், 250 கோடி ரூபாய்க்கு மிகாமலும் இருப்பின். அது நடுத்தர நிறுவனம். எனவே, குறு, சிறு அல்லது நடுத்தர நிறுவனத்தை நிறுவ விரும்பும் எந்தவொரு நபரும், சுய அறிவிப்பின் அடிப்படையில், www.udyamregistration.gov.in என்ற இணையதளத்தில் பதிவை மேற்கொள்ளலாம். உத்யம் பதிவு அல்லது புதுப்பித்தல் செயல்பாட்டில், சுய அறிவிப்பின் வாயிலாக எவரேனும் வேண்டுமென்றே உண்மைகள் மற்றும் புள்ளி விபரங்களை தவறாக தந்தாலோ அல்லது மறைக்க முற்பட்டாலோ, சட்ட பிரிவு, 27ன் படி, குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்துக்கு பொறுப்பாவர். உத்யம் பதிவு செய்ய, கட்டணம் ஏதும் இல்லை. 2020ம் ஆண்டு ஜூன், 30க்கு முன்னால் பதிவு செய்த நிறுவனங்களின் பதிவு, 2021 மார்ச், 31 வரையிலான காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். உத்யம் பதிவு குறித்த மேலும் விபரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X