பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நேற்று 79 பேருக்கு கொரோனா

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மட்டும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 1,000ஐ கடந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 79 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப் பட்டது. இதில், ஓசூர் அரசனட்டியை சேர்ந்த, 7, 12 வயது சிறுவர்கள், மீனாட்சி நகரை சேர்ந்த, 3 வயது சிறுமி, பாஞ்சாலியூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, சத்யசாய் நகரை சேர்ந்த, 15 வயது சிறுவன் ஆகியோர் அடங்குவர். நேற்று தொற்று உறுதியான, 79 பேரும், ஓசூர் இ.எஸ்.ஐ., மற்றும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டையில் ஒரே பகுதியில், மொத்தம் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டார். தொற்று பரவாமல் தடுக்க, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தொற்று பாதித்த பகுதி வீடுகளில், கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டு, அவற்றை பயன்படுத்த அறிவுறுத்தினார். தமிழகத்திலேயே ஏப்., மாதத்தின் கடைசி வரை பச்சை மண்டலமாக இருந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று வரை, 1,068 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதனால், தர்மபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட ஒன்பது மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி, தொற்று பாதிப்பில், 28வது இடத்துக்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X