பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் குண்டாஸில் கைது

Added : ஆக 02, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 59. அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளராக இருந்த அவர், அ.ம.மு.க.,வில் சேர்ந்து, கடந்த மாதம் மீண்டும், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். தற்போது, அடிப்படை உறுப்பினராக மட்டும் உள்ளார். கந்து வட்டி தொழில் செய்வதாக, அவர் மீது வந்த புகாரையடுத்து, கடந்த மாதம், 25ல், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். அவர் மீது, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு, எஸ்.பி., பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். இதன்படி அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலை, சிறையில் உள்ள வெங்கடேசனிடம், போலீசார் நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X