சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த வாலிபர் மர்மச்சாவு; தர்மபுரி அருகே பகீர்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பாலக்கோடு: பஞ்சப்பள்ளி அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர், மர்மமான முறையில் இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளியை அடுத்த, ஒட்டர்திண்ணையை சேர்ந்த மகாதேவன் மகன் விஜி, 24; பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியில் உள்ள பிக்கனஹள்ளியை சேர்ந்த முனிராஜ் மகள் ராஜேஸ்வரி, 20; இவரை, ஆறு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். கணவருடன் பெங்களூரு சென்று, ஒரு மாதம் வாழ்ந்த ராஜேஸ்வரி, பெற்றோரிடம் திரும்பி வந்துள்ளார். ஊரடங்கால் வீட்டிலிருந்த விஜி, நேற்று முன்தினம் ராஜேஸ்வரியை பார்த்து வருவதாக, நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. பெற்றோர், நண்பர்கள் அவரை தேடிய நிலையில், பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் பாரூரான்கொட்டகை பகுதியில், உடலில் காயங்களுடன், விஜியின் உடல் நேற்று கிடந்தது. பஞ்சப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். காதல் திருமணம் செய்த வாலிபர், மர்மமான முறையில் இறந்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X