பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளத்தில் சமஸ்கிருத பயிற்சி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கரூர்: 'இணையதளத்தில் சமஸ்கிருத பயிற்சி பெறலாம்' என, கரூர் மாவட்டம், மகாதானபுரம் சமஸ்கிருத பயிற்சி மைய ரட்சாதிகாரி, ராஜாராம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த, 30 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை படிப்பவர்கள், அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள, புதிய கல்வி கொள்கையில், சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால், மகாதானபுரம் சமஸ்கிருத பயிற்சி பள்ளியில், இணையதளத்தில் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதுவரை, 3,000 பேர் பதிவு செய்துள்ளனர். பயிற்சி பெற விரும்புவோர் http://bhashyam.org/regnshibir என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று, ராஜாராம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X