பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு இனி புது அடைமொழி: 'சமூக நீதி பாதுகாவலர்' என தீர்மானம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஈரோடு: ஸ்டாலினை 'சமூக நீதி பாதுகாவலர்', என்ற அடைமொழியோடு அழைக்க, ஈரோடு தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு நாள் வரும், 7ம் தேதி வருகிறது. மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வார்டுகளில், அவரது படம் வைத்து, மரியாதை செலுத்த வேண்டும். மருத்துவர் படிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, கட்சி தலைவர் ஸ்டாலின் பெற்று தந்துள்ளார். எனவே, ஸ்டாலினை இனி, 'சமூக நீதி பாதுகாவலர்' என்ற அடைமொழியோடு அழைக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, சமஸ்கிருத மொழியை புகுத்தவே என தெரிய வருகிறது. எனவே இதை தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. அரசுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் போது சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி மற்றும் மக்களின் கருத்து கேட்க வேண்டும் என்பதை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202012:11:23 IST Report Abuse
ஆரூர் ரங் சமூக நீதி காவலர் ன்னு ஏற்கனவே வி பி சிங்குக்கு பட்டம் கொடுத்தீர். கொஞ்ச நாளிலேயே அவர் காணாம போயிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X