பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மழை: மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால், மேட்டூர் அணை நீர்திறப்பு குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., டெல்டா குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன், 12ல், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பரவலாக மழை பெய்வதால், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, நேற்று காலை, 9:30 மணிக்கு, 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 4,118 கனஅடி நீர் வந்தது. நீர்மட்டம், 63.97 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X