சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்., கிணறைத் தாண்டி விட்டீர்களா...

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
'காங்., கிணற்றிலிருந்து, முக்கால் துாரம் தாண்டி விட்டீர்கள்; இன்னும் கொஞ்சம் தான்...' என, கிண்டலாக சொல்லத் துாண்டும் வகையில், காங்., தேசிய செய்தி தொடர்பாளர், நடிகை குஷ்பு அறிக்கை:புதிய கல்விக் கொள்கையில் காங்கிரசின் நிலைப்பாட்டில் இருந்து நான் மாறுபடுகிறேன்; இதற்காக, ராகுலிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதே நேரம், நான் தலையாட்டும், 'ரோபோ' கைப்பாவையாக இருப்பதை விட,
காங்., கிணறைத் தாண்டி விட்டீர்களா...

'காங்., கிணற்றிலிருந்து, முக்கால் துாரம் தாண்டி விட்டீர்கள்; இன்னும் கொஞ்சம் தான்...' என, கிண்டலாக சொல்லத் துாண்டும் வகையில், காங்., தேசிய செய்தி தொடர்பாளர், நடிகை குஷ்பு அறிக்கை:

புதிய கல்விக் கொள்கையில் காங்கிரசின் நிலைப்பாட்டில் இருந்து நான் மாறுபடுகிறேன்; இதற்காக, ராகுலிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதே நேரம், நான் தலையாட்டும், 'ரோபோ' கைப்பாவையாக இருப்பதை விட, உண்மையைப் பேசவே விரும்புகிறேன்.

'அமைதியை சீர்குலைப்போர் தனிமனிதர்களாக இருந்தாலும், சிலைகள் தான் அடிப்படையாக உள்ளன. எனவே, சிலை அமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்...' என, பதிலளிக்க தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:

அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், அமளிக்காடாக, மத கலவர பூமியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் மீது மென்மையான நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொண்டதால் தான், இப்போது அவர்களுக்கு துணிச்சல் வருகிறது.

'இது போன்ற அனாவசிய செலவுகளை, மத்திய - மாநில அரசுகள் குறைத்தாலே, நிதி நிலைமை சீரடைந்து விடும்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், மாநிலத் தலைவர் சண்முகராஜன் அறிக்கை:

அரசு அலுவலர்களுக்கு பல சலுகைகள் மறுக்கப்படும் நிலையில், ஓய்வு பெற்ற, தலைமை செயலர்களின் வீடுகளில், வீட்டு வேலை செய்ய, பணியாளர்களுக்கு ஓய்வூதியத்துடன், மாதம், 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

'அப்போ, நம்ம முதல்வரை, தீர்க்கதரிசின்னு சொல்றீங்க; அப்படித் தானே...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி:

காவிரி டெல்டா விவசாயிகள் விரும்பாத எந்தத் திட்டத்தையும், காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த முடியாது. இதற்காக தான் முதல்வர் இ.பி.எஸ்., பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, காவிரி டெல்டாவை அறிவித்துள்ளார்.

'காங்கிரசில் இருக்கும் பலர், பல கட்சிகளை சேர்ந்தவர்கள் தான்; அரசியலில் கட்சி மாறுவது; கட்சிக்கு எதிராக பேசுவது சாதாரணமானதுங்கோ...' என, பதிலளிக்கத் துாண்டும் வகையில், காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை:

நம் தற்பெருமைக்காக, கட்சியை மோசமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் தலைமை, இந்த தேசத்திற்காக ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. அளப்பற்ற தியாகங்களை செய்துள்ளது. கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

'கொரோனா, உங்களை, 'டச்' செய்தது தெரியும். போகிற போக்கு என்கிறீர்களே; எப்போது போகும் என்பது தானே, சந்தேகமாக இருக்கிறது...' என, கிண்டலாக கூறத் துாண்டும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேச்சு:


latest tamil news
சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நானும் என் மனைவியும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு விட்டோம். போகிற போக்கில், கொரோனா என்னையும், 'டச்' செய்து விட்டு சென்று விட்டது.

'சமூக வலைதளங்களை, அனைவரும் புறக்கணிக்கும் நேரம் வந்து விட்டது...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி:

அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகநுாலில், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைக்கின்றனர். நேர்மையாக செயல்படும், மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்தும், தவறான கருத்துகள் பதிவிட்டுள்ளனர். புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

'சட்டியில் இருந்தால், அகப்பையில் தாராளமாக வரும்; சட்டியே, ஐந்து மாதங்களாக காலி...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு அறிக்கை:

கொரோனா தடுப்புப் பணியை, மாநில அரசுகள் மேற்கொள்ள, ஜி.எஸ்.டி., நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அந்த தொகை கிடைத்தால் தான், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு, மாநில அரசுகளால் செலவு செய்ய முடியும்.

'அந்த குழுவில் இருந்து பார்த்தது போல கூறுகிறீர்களே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:


latest tamil news
இந்திய வரலாற்றுத் துறை, கல்வித்துறையின் உயரிய அமைப்பான, என்.சி.இ.ஆர்.டி.,யில், பெரும்பாலும் இடம்பெற்றுள்ளவர்கள் பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ்., சிந்தனை உள்ளவர்களும் தான். மத்திய அரசு உருவாக்கிய கல்வியாளர்கள் குழுவில் கூட, எந்தவொரு கல்வியாளரும் இடம்பெறவில்லை.

'வர்ணாசிரம கோட்பாட்டை, உங்களைப் போல, தமிழக கட்சிகளில் பல, இன்னும் மறக்கவில்லையோ...' என, நெத்தியடியாக பதிலளிக்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:

அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக, ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை, எங்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
02-ஆக-202019:28:31 IST Report Abuse
a natanasabapathy ஜோதிமணி அவர்களே காங்கிரசால் நாடே kettu விட்டதும் மக்கள் அளப்பரிய துன்பத்தை அனுபவித்து வருவதும் தெரியாத அளவுக்கு குருடாகி விட்டீர்களா சீனா காஷ்மீர் ஸ்ரீலங்கா பிரச்சினை கள் தொடர்வதற்கு முழு முதல் காரணம் காங்கிரஸ் வாய இருப்பதால் எதைவேண்டுமானாலும்பேசுவதா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202017:40:54 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டில் கல்வி அறிவு சிறிதும் இல்லாதவர்கள் தான் கல்வி மாற்றங்கள் வருவது பற்றி குற்றம் கூறுகிறார்கள். அதை நாமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-202016:02:46 IST Report Abuse
r.sundaram அம்மணிக்கு வித்தியாசம் தெரியவில்லை. தியாகம் எல்லாம் பண்ணியது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால் தற்போது இருப்பது இந்திரா காங்கிரஸ். இந்திரா காங்கிரஸ் என்பதால் அந்த குடும்பத்துக்கு மட்டும் சொந்தமான காங்கிரஸ். அது தனி மனித வியாபாரம், அப்படித்தானே நடந்தது, நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X