சீன எல்லையில் நடந்த மோதல் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்:எல்லையில் சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய அரசு துணிச்சலுடன் செயல்பட்டதாக, அமெரிக்க எம்.பி.,க்கள் பாராட்டு தெரிவித்துஉள்ளனர்.

கடந்த, ஜூன், 15ல், காஷ்மீரின் லடாக் அருகே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சில் சமரசம் ஏற்பட்டது. இரு தரப்பும் படிப்படியாக எல்லையிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று வருகின்றன.இந்நிலையில், சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு பயப்படாமல், இந்திய அரசு உறுதியுடனும், துணிச்சலுடனும் செயல்பட்டதாக, அமெரிக்க, எம்.பி.,க்கள், கட்சி வேறுபாடுகளை கடந்து, பாராட்டு தெரிவித்துஉள்ளனர்.

ஜனநாயக கட்சியின், எம்.பி.,யான பிராங் பலோன் கூறியதாவது:சீனா, தன் அத்துமீறல் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் அமைதி பேச்சு வாயிலாகவே தீர்க்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், இந்தியாவின் செயல்பாடுகள், துணிச்சலாகவும், பாராட்டத்தக்க வகையிலும் இருந்தன.இவ்வாறு, அவர்கூறினார்.

குடியரசு கட்சியின், எம்.பி.,யான கோரி கார்டனர் கூறுகையில், ''இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பு, மேலும் வலுவடைந்துள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்னையில், இந்தியாவின் நடவடிக்கைகள் வரவேற்க தக்க வகையில் இருந்தன. சீனாவின் அத்துமீறல்களுக்கு அடிபணியாமல், இந்தியா செயல்பட்டது, பாராட்டத்தக்க விஷயம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-ஆக-202019:04:27 IST Report Abuse
RajanRajan இங்குள்ள இத்தாலிய சீன தூதன் கடும் மனஉளச்சலில் உலாத்துறான். நேரம் பார்த்து நெய் ஊத்தீட்டீங்க உங்க பங்குக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X