பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு கொடுமை: குழந்தை தொழிலாளர்களாக மாறும் சிறார்கள்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
கொரோனா,கொடுமை, குழந்தை தொழிலாளர், சிறார்கள்,

கோவை: ''சார்...சார்... மாஸ்க் வாங்கிக்கோங்க சார்... 15 ரூபாதான்; நீங்க வாங்குனாதான் நாங்க சாப்பிடவே முடியும் சார்,''... என்ற அச்சிறுவனுக்கு, 12 வயது தான் இருக்கும்.

அழுக்கேறிய சட்டையுடன், எண்ணெய் தேய்க்காத தலையுடன் காட்சியளித்த அவனின் கண்களில், பலநாள் பசி ஏக்கம் தெரிந்தது.காலை 8:00 மணிக்கு முன்பே, உக்கடம் மேம்பாலத்தின் கீழ், இவனை போல, பல சிறுவர்கள் வரிசையாய் நின்று, மும்முரமாக வியாபாரத்தில் இறங்கி விடுகின்றனர்.இவர்கள் தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக, இப்படி பாடுபட்டாலும், மற்றொரு புறம் அவர்களையும் அறியாமலே, மெள்ள குழந்தை தொழிலாளர்களாக மாறி வருகின்றனர் என்பதுதான் உண்மை!பள்ளிகள் திறக்காததால், இப்படி குழந்தை தொழிலாளர்களாக மாறுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


latest tamil news


வறுமையை வென்றெடுக்க தெரியாமல், தற்போதைய அசாதாரண சூழலிலும், எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், வீதிகளில் சிறார்கள் வியாபாரம் செய்வதை காண முடிகிறது. மாஸ்க், பூ வியாபாரம், காய்கறி, பழங்கள் என எதையாவது விற்று, பசியில் இருந்து கரையேற துடிக்கின்றனர். இவர்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், வீதி வீதியாக பொருட்களை விற்பனை செய்ய அனுப்புவதும் தெரியவந்துள்ளது.


latest tamil news


பொருட்களை விற்றுக்கொடுத்தால், மாலையானால் குறைந்தபட்சம் 150 ரூபாயுடன் வீட்டுக்கு போகலாம். ரேஸ்கோர்ஸ், புலியகுளம் உள்ளிட்ட சில இடங்களில், காலை 6:00 மணிக்கே, காய்கறி, கீரை கூடையுடன், வேன்களில் இருந்து குழந்தைகள் இறக்கி விடப்பட்டு, சில மணி நேரங்களில் மீண்டும் வேன்களில் அழைத்து செல்லப்படுவதாகவும், தகவல் கிடைத்துள்ளது. இடைத்தரகர்களை நம்பி, சில பெற்றோர் தங்களின் குழந்தைகளை சொற்ப சம்பளத்திற்கு அனுப்புகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிப்பதோடு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும், அரங்கேற வாய்ப்புள்ளது.


யார்தான் பொறுப்பு?

குழந்தைகளை மீட்கவும், விசாரணை நடத்துவதிலும், கொரோனா காரணமாக சிக்கல் இருக்கும் பட்சத்தில், மாற்று வழிமுறையை கையில் எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமையல்லவா. இந்நிலை தொடர்ந்தால், இடைநிற்றல் அதிகரிப்பதோடு, அடிப்படை கல்வி பெறாமல், தொழிலாளர்களாக மாறும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. கலெக்டர் இவ்விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.


'மீட்பதில் சிக்கல் உள்ளது'

தேசிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு திட்டத்தின் மண்டல அலுவலர் விஜயக்குமாரிடம் கேட்டபோது, ''பள்ளிகள் திறக்காததால், பெற்றோருக்கு உதவியாக சில குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை மீட்பதிலும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் உள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு தான், இச்சிறார்களிடம் விசாரணை நடத்த முடியும். இவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கலாம். பொது இடங்களில், குழந்தைகள் வியாபாரம் செய்வதை பார்த்தால், 0422- 2305445 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஆக-202017:00:19 IST Report Abuse
S. Narayanan மக்கள் பிச்சைக்காரர்கள் ஆவதற்கு முன் லோக்டவுனை ஒழித்து எல்லோருக்கும் வேலை கிடைக்க எடப்பாடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஆக-202016:58:29 IST Report Abuse
S. Narayanan புகார் கொடுத்ததால் தான் அதிகாரிகளுக்கு தெரியுமா. அவர்கள் கண்ணை மூடிக்கொண்டா வேலை செய்கிறார்கள். லோக்கடவுனால் எத்தனை கஷ்டங்கள் என்பது கூட எடப்பாடிக்கு தெரியாதா. பெற்றோருக்கு வேலை இருந்தால் குழந்தைகள் எதற்கு தெருவில் மாஸ்க் விற்கப்போகிறார்கள்.
Rate this:
Cancel
02-ஆக-202014:48:12 IST Report Abuse
ருத்ரா கொரோனாகாலத்தில் பார்த்து பார்த்து உணவளித்த தன்னார்வ இளைஞர்களை மறக்க இயலாது இக்குழந்தைகளின் கல்விக்கும் உணவிற்கும் அரசுடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு காண வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X