பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னர் மருத்துவப் பரிசோதனை; கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கவர்னர், மாளிகை, கொரோனா, பன்வாரிலால் புரோஹித், பரிசோதனை, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona positive, corona update, coronavirus update, coronavirus positive, tn governor, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai

சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கொரோனா நோய் அறிகுறியுடன் இருந்த, 147 பேருக்கு, கடந்த வாரம், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள், கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, 38 பேருக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கவர்னரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு மட்டும், நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


latest tamil news


இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
02-ஆக-202017:55:03 IST Report Abuse
Chandramoulli இந்த நோயை திட்டமிட்டு எல்லா இடங்களிலும் பரப்பி தமிழக அரசை நிம்மதியாக இருக்க விடாமல் மக்களிடம் வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரப்பி உள்ளனர் தப்லிக் ஜமாத் . இதற்க்கு தி மு க மற்றும் அதன் வால் பிடித்து கொண்டு திரியும் கட்சிகளுக்கும் பங்கு உண்டு .
Rate this:
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202017:08:00 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan No need governor for the states ..if governor. reduce government manpower in governor buildings , Please don't waste government forces there ...Central government reduced un wanted department form governor building ... old rules and protacall can change by central government
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஆக-202016:41:00 IST Report Abuse
Bhaskaran தண்ட சம்பளம் வாங்கும் ஆட்கள் ஆளுநர் மாளிகையில் இவ்வளவு பேர் தேவையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X