பொது செய்தி

தமிழ்நாடு

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு வரவேற்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணி, பூரண உடல் நலம் பெற்று, ஓய்வுக்கு பிறகு, நேற்று, சொந்த ஊரான பள்ளிபாளையம் அருகே, கோவிந்தபாளையம் கிராமத்திற்கு வந்தார். அவரை, பள்ளிபாளையம் நகர, அ.திமு.க., செயலாளர் வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணி ஆகியோர் தலைமையில், பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும், எஸ்.பி.சக்தி கணேசன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,மணிராஜ், குமாரபாளையம் தாசில்தார் தங்கம், பள்ளிபாளையம் ஆணையாளர் இளவரசன் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் கொடுத்து வரவேற்றனர். அதேபோல், பல்வேறு கோவில்களில் இருந்து அபி?ஷகம் செய்யப்பட்ட பிரசாதங்களை கொண்டு வந்து வழங்கினர். அனைவரின் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டு, நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X