பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி, டவுன் பஞ்சாயத்தில் ஊரடங்கு குறித்து எச்சரிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ராசிபுரம்: நாளை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வுகள் ஏதும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம், அத்தியாவசிய கடைகள் கூட திறக்க அனுமதியில்லை. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வெற்றி பெற்றது. அதேபோல் இந்த வாரமும் முழு கட்டுப்பாடுடன் ஊரடங்கை நடைமுறைப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ராசிபுரம் நகராட்சி பகுதியில் அனைத்து கடை மற்றும் வீடுகளில் துப்புரவு ஊழியர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் முழு ஊரடங்கு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் கடை திறப்பவர்கள், வீட்டை விட்டு காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் டவுன் பஞ்., சார்பில் தண்டோரா மூலம் நேற்று அறிவிப்பு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X