பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், அரசு மருத்துவமனையில், இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். சிகிச்சைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கொரோனா வார்டில், 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்பது பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், ஒன்பது பேர் உள்ளனர். கணவன், மனைவி, மகன் ஆகியோர், சளி, காய்ச்சல் பரிசோதனை செய்யச் சொல்லி கேட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அட்மிட் ஆகி, 14 நாட்கள் கழித்துதான் பரிசோதனை செய்ய முடியும் என்றேன். அவர்களும் அட்மிட் போடச் சொன்னார்கள். நானும் அட்மிட் செய்தேன். ஆனால் அவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறோம் என, சென்று விட்டனர். இது தான், கொரோனா வார்டிலிருந்து, மூன்று பேர் ஓட்டம் என, பரவியது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X