பொது செய்தி

தமிழ்நாடு

அரசு டாக்டர் உள்பட 32 பேருக்கு கொரோனா உறுதி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

நாமக்கல்: அரசு டாக்டர், 3, 5 வயது குழந்தைள் உள்பட, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, 32 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ஏப்., 1 முதல், இதுவரை, 699 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், ஆறு பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், ப.வேலூர் அடுத்த கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டராக பணியாற்றும், 26 வயதுள்ள நபருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெண்ணந்தூரில், நான்கு பேர், கல்லுபாளையத்தில், 3 மற்றும் 5 வயது சிறுமியர் உள்பட, மூன்று பேர், கூடச்சேரி, பள்ளிபாளையம், நாமக்கல் நேதாஜி நகரில் தலா, இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், எர்ணாபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, கூலிப்பட்டி, சிங்களாந்தபுரம், ஆலம்பாளையம், குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை, ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த தலா, ஒருவர் உள்பட, நேற்று ஒரே நாளில், 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம், மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 731ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X