பொது செய்தி

தமிழ்நாடு

பாசன திட்டங்களில் மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ப.வேலூர்: பிரதம மந்திரியின் நீர் பாசன திட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்பு நீர், மழை தூவான் போன்ற பாசன அமைப்புகளை அமைக்க வேளாண் துறை மூலம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.


கரும்பு, மக்காச்சோளம், தென்னை, பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு துணை நீர் நிலை மேலாண் திட்டத்தில் பாசனக்குழாய்கள் கொள்முதல் செய்ய அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய், மின்மோட்டார் அல்லது டீசல் பம்ப்செட் அமைக்க, அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அல்லது செங்கல் கட்டுமானத்தில் தொட்டி அமைத்துக்கொள்ள, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, வட்டார உதவி வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X