கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Added : ஆக 02, 2020
Share

நாமக்கல்: கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். எஸ்.பி., சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து, அமைச்சர் சரோஜா ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது: கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம், மாவட்டத்தில், வி.ஏ.ஓ.,க்கள் மூலம், இதுவரை, 18 ஆயிரத்து, 846 மாற்றுத்திறனாளிகளுக்கு, நிவாரணத்தொகையாக, தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 'போஷான் அபியான் நாமக்கல்' என்ற, யு-டியூப் இணையதளத்தின் மூலம், ஊரடங்கு உத்தரவை பின்பற்ற அறிவுரை வழங்கப்படுவதுடன், போட்டிகளும் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, எர்ணாபுரம் தனியார் நிறுவன கிடங்கில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, 150 நபர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும், தனிமைப்படுத்தும் மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X