பொது செய்தி

தமிழ்நாடு

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், அரசின் சமூக நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், 30 பேருக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை, 13 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை அமைச்சர் சரோஜா பேசியதாவது: முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு அதிக சலுகைகளை வழங்கி இந்தியாவில் முன்னோடி மாநிலமாக இன்றும் தமிழகம் விளங்குகிறது. சமூக நலத் திட்டங்களுக்கு, முதல்வர் முன்னுரிமை கொடுத்து வருகிறார். கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை, அரசு அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிய வேண்டும். கைகளை, 20 வினாடிகள் நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியம், ஆர்.டி.ஓ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X