பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

Added : ஆக 02, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: கரியாம்பாளையம் பிரிவு சாலையில், அறிவிப்பு பலகை இல்லாததால், வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எலச்சிபாளையம் ஒன்றியம், கரியாம்பாளையத்தில் தினமும் எராளமான இருசக்கர, கனரக, இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் மடையங்காட்டுபுதூர், கொன்னையார், கட்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிந்து செல்கிறது. ஆனால், பிரிவு சாலை இருப்பதற்கான அடையாளமே இல்லை. வாகனஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதி தெரியாமல் வேறு இடத்துக்கு சென்று அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு, எந்தெந்த சாலை எந்த பகுதிக்கு செல்கிறது என்பது குறித்த அறிவிப்பு பலகை வைத்தால், வாகன ஓட்டிகள் பயனடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X