அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: 'இலுப்பிலி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்பிலி கிராமத்தில் கடந்த பல வருடங்களாக அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுவரை, சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. திறந்த நிலையில் உள்ளதால், இரவு நேரங்களில் திருடர்கள் எளிதில் பள்ளிக்குள் புகுந்து தளவாட பொருட்கள், கணினி உள்ளிட்டவற்றை திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, மது அருந்தும் கூடாரமாகவும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X