கிருஷ்ணராயபுரத்தில் உழவு பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணராயபுரத்தில் உழவு பணி தீவிரம்

Added : ஆக 02, 2020
Share

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், விதை தெளிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டியில், 50 மி.மீ., மழை பெய்தது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மானாவாரி விளைநிலங்களில் விதை தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணி நடந்தது. தொடர்ந்து நிலத்தில் எள், துவரை, சோளம் ஆகிய விதைகள் விதைக்கப்பட்டன. மேலும், பருவ மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X