பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கரூர்: கடந்த ஒரு மாதத்தில், 26 அடி வரை அமராவதி அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


கேரளா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில், அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து செல்லும் தண்ணீர், திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. மேலும், குதிரையாறு, சண்முகா நதி, நங்காஞ்சியாறு, குடகானாறு ஆகிய உப நதிகள் அமராவதி ஆற்றில் இணைகின்றன. கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் உள்ள, 18 வாய்க்கால்கள் மூலம், 25 ஆயிரத்து, 248 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. மேலும், சின்னதாராபுரம், நஞ்சை காளக்குறிச்சி, அணைப்பாளையம் பகுதியில், மூன்று பழைய அணைக்கட்டுகள், செட்டி பாளையத்தில் உள்ள தடுப்பணைகளில் பிரியும், நான்கு பழைய பாசன வாய்க்கால் மூலம், 13 ஆயிரத்து, 175 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் கேரளா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. கடந்த மாதம், 2ல், 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 25 அடியாக இருந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 211 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம், 51.64 அடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அமராவதி அணையின் நீர்மட்டம், 26.64 அடி வரை உயர்ந்துள்ளது. இம்மாத இறுதியில் சாகுபடிக்காக அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அமராவதி பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X