சாலையோரம் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கரூர்: சாலையோரம் மணல் குவியல் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். கரூரிலிருந்து, கோவை, திருப்பூர் செல்லும் வாகனங்கள், காட்டு முன்னூர் வழியாக செல்கின்றன. இதில், காட்டுமுன்னூர் கடைவீதியில், சாலையின் இருபுறமும் ஏராளமான மணல் துகள்கள் திட்டுத் திட்டாக படிந்துள்ளன. இதனால், வாகனங்கள் செல்வதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும் போது, மணலில் சறுக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், காற்று வீசும் நேரங்களில், மணல் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகின்றன. இதனால் அவர்கள் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. சாலையோரம் படிந்துள்ள, மணல் குவியலை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X