பொது செய்தி

இந்தியா

பிரீமியர் கிரிக்கெட் தொடரில் சீன ஸ்பான்சர்ஷிப்?: இன்று ஆலோசனை

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
IPL, Chinese Sponsorship, Governing Council, Meeting, agenda, ஐபிஎல், பிரீமியர் கிரிக்கெட், சீனா, ஸ்பான்சர்ஷிப், ஆட்சிமன்ற குழு, ஆலோசனை

புதுடில்லி: இன்று (ஆக.,02) நடைபெறவுள்ள பிரீமியர் கிரிக்கெட் தொடர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் சீன ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், 13வது பிரீமியர் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் யு.ஏ.இ.,யில் பிரீமியர் தொடரை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விண்ணப்பம் அளித்தும் மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே, போட்டி அட்டவணையை இறுதி செய்வதற்காக பிரீமியர் கிரிக்கெட் தொடரின் ஆட்சி மன்ற குழு இன்று (ஆக.,02) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்கிறது.


latest tamil news


இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பிரீமியர் தொடர் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அணி நிர்வாகிகளுக்கும், போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆலோசனை கூட்டத்தில் சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை தொடர்ந்து வைத்திருப்பதா? வேண்டாமா? என்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
02-ஆக-202019:16:49 IST Report Abuse
K E MUKUNDARAJAN இது ஒரு தேவை இல்லாத தமாஷ். இதற்கு பணமுள்ள அறிவு ஜீவிகள் துபாய் போயி கோரோண தொத்திக்கொண்டு வருவான். ஐ பி எல் பார்க்க போகிறவர்கள் வரும்போது சொந்த செலவில் ஏர்போர்ட்டில் பதினைந்து நாட்கள் தனிமை படுத்தப்பட வேண்டும். இது சம்மந்த பட்ட வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202015:09:56 IST Report Abuse
Krishna நீக்குங்கள். இல்லையெனில் தேசத்துரோகம். ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் சீன ஸ்பான்சர்ஷிப் என்பதால் இம் முறை சன் ரைஸர் ஐதராபாத் போட்டியில் பங்கேற்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X