பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய கோவில்கள், ஆறு, குளங்கள்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஆடிப்பெருக்கு, கோவில்கள், குளங்கள், வெறிச்சோடின

சென்னை: ஊரடங்கினால் ஆடிப்பெருக்கான இன்று (ஆக.,02) கோவில்கள், ஆறு, குளங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளடைவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தளர்வுகள் அளித்தாலும், தமிழகத்தில் ஆக., மாதம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு ஆகும். இந்நிலையில் ஆடி பெருக்கான இன்று பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்றும், ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடுகள் நடத்துவர். ஆடிப்பெருக்கில் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.


latest tamil news


ஆனால் முழு ஊரடங்கு காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை. பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோரங்களில் மக்கள் பெருந்திரளாக கூடுவர். ஆனால் இந்த முறை அனைத்து காவிரி கரையோர பகுதிகளில் கூடுதுறைகளில் பொதுமக்கள் வழிபாடு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பொது முடக்கத்தையும் மீறி மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
02-ஆக-202015:18:57 IST Report Abuse
Cheran Perumal ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு.நல்ல அரசு.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202015:05:21 IST Report Abuse
Tamilan வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஊரடங்கு போட்டால், இன்று மட்டும் விலக்கு அறிவித்திருக்கலாம். இருப்பினும், அது தேவையில்லாமல் நோய் பெருகதான் வழிவகுக்கும் .
Rate this:
Cancel
02-ஆக-202014:31:39 IST Report Abuse
ருத்ரா இந்த கொரோணா வால் எத்தனை சின்ன சின்ன ஆசைகளை இழந்தோம். படத்தில் அவர்களை பார்த்து மகிழ்ந்தோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X