பொது செய்தி

இந்தியா

இந்தியா - சீனா இடையே ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Ladakh, Disengagement, Fifth Round, Corps, Commanders, Moldo, china, லடாக், இந்தியா, சீனா, பேச்சுவார்த்தை, மோல்டோ, ஐந்தாம்சுற்று

புதுடில்லி: லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியிலிருந்து சீன படைகளை முற்றிலும் விலக்கிக்கொள்ள வைப்பது தொடர்பான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை சீனாவின் எல்லைக் கோடு பகுதியான மோல்டோவில் தொடங்கியுள்ளது.

ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலான நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பிலிருந்து கணிசமான படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் லடாக்கின் பாங்காங் ஏரி கரையான விரல் பகுதியில் சீன படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


latest tamil news


பாங்காங் ஏரியின் வடக்கு கரை உள்ளங்கை போன்றும், அதன் நீட்சி விரல்கள் போன்றும் காணப்படுவதால் அவற்றை ஒன்று, இரண்டு என எட்டு விரல்களாக பெயரிட்டுள்ளனர். இப்பகுதி தற்போது பிரச்னைக்குரிய பகுதியாக உள்ளது. இங்கு சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இங்கு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க இந்த 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரல்கள் பகுதியிலிருந்து சீன படைகளை முழுமையாக விலக்குவதில் இந்திய ராணுவம் கவனம் செலுத்தும் என்கின்றனர்.

இந்திய வீரர்களுடனான மோதலை தொடர்ந்து சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா. டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் 100-க்கும் மேற்பட்ட செயலிகளை தடை செய்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் என அனைத்து நாடுகளும் சீனாவை ஒரங்கட்டியுள்ளன. அமெரிக்காவும் டிக் டாக்கை முழுமையாக தடை செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் ஆரம்பகட்ட தகவல்களை மறைத்தது தொடர்பாக சீனாவிடம் உலக நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
02-ஆக-202022:28:07 IST Report Abuse
Pannadai Pandian வீ சாட் செயலி அரை குறையாக செயல்படுகிறது. தற்போது மெசேஜ் பாஸ் செய்யலாம்......ஆனால் வீடியோவில் கூப்பிட்டு பேச முடியாது. வாட்சப்பை விட அருமையான செயலி இந்த வீ சாட்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
02-ஆக-202019:21:36 IST Report Abuse
ocean அயோத்தியா குப்பத்து மீன் கூடைகாரிகளை இந்த ஐந்தாவது ரவுண்டு பேச்சு வார்த்தைக்கு அனுப்பலாம்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
02-ஆக-202019:17:48 IST Report Abuse
ocean தாய் பாஷையில் திட்டினால் எல்லையிலிருந்து பின் வாங்குவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X