உ.பி அமைச்சர் கமலா ராணி வருண் கொரோனாவுக்கு பலி

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
UP Minister, Kamal Rani Varun, Dies, COVID-19 death, CoronaVirus death, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona, உபி, அமைச்சர், கமல்ராணிவருண், கொரோனா, உயிரிழப்பு

லக்னோ: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உ.பி., தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமலா ராணி வருண், 62 இன்று (ஆக.,2) காலை உயிரிழந்தார்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்தவர் கமலா ராணி வருண். கடந்த ஜூலை 18-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.


latest tamil news



இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தார். முதல்வர் தனது இரங்கல் செய்தியில்: அமைச்சர் கமலா ராணி வருணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அமைச்சராக திறம்பட பணியாற்றினார். அவர் பிரபல தலைவராகவும், சமூக செயற்பாட்டளாராகவும் இருந்தார். இவ்வாறு தனது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
02-ஆக-202017:56:34 IST Report Abuse
Chandramoulli இரங்கல்கள் . நோயின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
02-ஆக-202017:02:39 IST Report Abuse
Nathan "லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல்" அந்த கான் பேட்டாவுக்கும் அரசு மருத்துவமனை அறிவியல் நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம். இத்தாலிய கான்கியின் அடாவடித்தனம். அனுமதிக்கும் மக்களின் அடிமைத்தனம் .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஆக-202016:48:38 IST Report Abuse
S. Narayanan இன்னும் கொஞ்சநாள் மக்களுக்கு சேவை செய்திருக்கலாம். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X