பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கிலும் அதிவேகத்தில் உலா: கார் மோதியதில் தந்தை பலி; மகள் படுகாயம்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

கோவை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஆக., மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கோவையில் திருச்சி சாலையில் ஊரடங்கு விதி மீறி அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.latest tamil news
கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 55. இவரது மகள் தீபிகா, 22. உறவினர் ஒருவரின் திதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை தீபிகா ஓட்டி வந்தார். இந்நிலையில், தனியார் பள்ளி சிக்னலில் இருந்து வலது புறத்தில் வாகனத்தை திருப்பும் பொழுது, ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்களின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தீபிகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil newsகிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சிங்காநல்லூரை சேர்ந்த நிரஞ்சன் எனத் தெரிந்தது. நிரஞ்சன் முன்னாள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில், முழு ஊரடங்கால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் சிலர், கார்களில் அதிவேகத்தில் உலா வருவதும் விபத்தை ஏற்படுத்துவதும் பொது மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஆக-202022:39:41 IST Report Abuse
NicoleThomson RTO ஆபிசரின் சொத்துக்களை பரமசிவம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க சொல்ல வேண்டும்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
02-ஆக-202022:22:50 IST Report Abuse
Jayvee ஆர் டி ஓ ஒபிபிசெர்.. பின்ன என்ன பணம் கொடிகனுக்குல இருக்கும். .. காசா கொடுத்து கேஸ் முடிச்சிடலாம்.
Rate this:
Cancel
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
02-ஆக-202021:02:10 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி ஆர் டி ஓ ஆபீசர் புள்ள, அப்பறோம் என்ன தற்கொலைனு கேச முடிங்க ஸ்காட்லான்ட் யார்டுங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X