மருத்துவமனையில் இருந்து சோனியா டிஸ்சார்ஜ்| Congress chief Sonia Gandhi discharged from hospital, says top doctor | Dinamalar

மருத்துவமனையில் இருந்து சோனியா 'டிஸ்சார்ஜ்'

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: டில்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா இன்று வீடு திரும்பினார்.73 வயதாகும் சோனியா, கடந்த ஜூலை 30ம் தேதி மாலை வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுதொடர்பாக டில்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்
Sonia, Discharged, Hospital, Congress Chief, sonia gandhi, hospitalised, சோனியா, மருத்துவமனை, டிஸ்சார்ஜ்

புதுடில்லி: டில்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா இன்று வீடு திரும்பினார்.

73 வயதாகும் சோனியா, கடந்த ஜூலை 30ம் தேதி மாலை வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக டில்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.எஸ்.ராணா வெளியிட்ட அறிக்கையில், 'காங்கிரஸ் தலைவர் சோனியா, ஜூலை 30 மாலை 7 மணிக்கு கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டிஸ்சார்ஜின் போது அவரது உடல் நிலை சீராக இருந்தது'. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


முன்னதாக வியாழன்று, காங்., சட்டமன்ற, பார்லி.,உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக சோனியா ஆலோசனை நடத்தினார். அதில், அரசியல் நிலைப்பாடு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறித்து விவாதித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தாண்டு பிப்ரவரியில் வயிற்றுவலி பிரச்னையால் அவதிப்பட்ட சோனியா, இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X