சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விசாரணையால் தீக்குளித்த நபர் மரணம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தியதால், உடலில் தீவைத்து கொண்ட சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர், குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வந்தார்.
வீட்டு வாடகை,  தீக்குளிப்பு,  இன்ஸ்பெக்டர், விசாரணை, கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால், சஸ்பெண்ட்,

சென்னை: வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தியதால், உடலில் தீவைத்து கொண்ட சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர், குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த 29 ல் ராஜேந்திரன் புழல் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி அவரை போலீஸ் ஸ்டேசன் வர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


latest tamil newsஇதனால், வேதனையடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் பென்சாமை, சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202020:45:24 IST Report Abuse
.Dr.A.Joseph புருசோத்தமன் சார் காவலர்கள் வலக்கை பதிவு செய்து கோர்ட்டுக்கு அனுப்பினால் அவர்கள் பார்த்துக்கொள்ளப் போகிறார்கள்.எனது கணிப்பு சரி என்றால் இந்த இன்ஸ்பெக்ட்டர் கர கர குரலுக்கு சொந்தகாரரர். இன்றைக்கு ஒரு உயிர் போய்விட்டதே .
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202020:36:11 IST Report Abuse
.Dr.A.Joseph எனது எண்ணம் சரியாக இருந்தால், இந்த பென்சாம் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி இன்ஸ்பெக்ட்டராக பணியாற்றி இருந்தால் ,வாட்ஸாப்பில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்டாகியவர் .அவராக இருந்தால் எப்படி மீண்டும் பணிக்கு வந்தார்.அந்த பாலியல் தொல்லை புகார் என்னவானது. இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.கொலைகளை செய்து விட்டு நான் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட பாவப்பட்ட என்று தப்பிக்க முயல்வது அதிகரித்து வருகிறது.ஊடகங்கள் இதனை மனித உரிமைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-ஆக-202019:59:36 IST Report Abuse
RaajaRaja Cholan சில போலீஸ்காரங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பண்ணியே பழகி விட்டது , நேர்மையுடனும் பணிவுடனும் அணுகி இருந்தால் இது போல் தவறுகள் ஒரு பொதும் நிகழாது ,. கட்ட பஞ்சாயத்து பண்ணி பணக்காரனுக்கு அதிகாரத்தில் இருக்கும் சிலருக்கும் கூழை கும்பிடு போடும் சில சில்லறை போலீஸ் அதிகார திமிரை காட்டும் வரை இது தொடரும். அடுத்தவன் வாழ்க்கையை அழித்த லஞ்ச பேய்களின் அதிகரா ஆட்டம் போடும் நபர்களின் குடும்பங்கள் நன்றாக வாழ்த்துள்ளதா என்று கவனித்து பார்த்தாள் உங்களுக்கு புரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X