கடவுள் ஹனுமனுக்கு சிறப்பு பாராயணம்: தனது இல்லத்தில் நடத்துகிறார் கமல்நாத்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Kamal Nath, Host, Hanuman Chalisa, Ayodhya, Hanuman Chalisa recital, Ayodhya event, கமல்நாத், ஹனுமன், பாராயணம், அயோத்தி, பூமி பூஜை

போபால்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள் மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் தனது வீட்டில் கடவுள் ஹனுமன் குறித்த பாராயணம் நடத்துகிறார்.

உ.பி., மாநிலம் அயோத்தியில் வரும் 5ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்; பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் போபால் நகரில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கடவுள் ஹனுமன் புகழ் பாடும் பாராயணம் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.


latest tamil news


இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல்நாத் வரும் 4-ம் தேதி போபால் நகரில் உள்ள அவரின் நேதாஜி இல்லத்தில் கடவுள் ஹனுமன் குறித்த பாராயணத்தை நடத்துகிறார். சமூக விலகலைக் கடைப்பிடித்து, அனைத்து சுகாதார விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். ஹனுமனின் தீவிர பக்தரான கமல்நாத், முக்கியமான விஷேச நாட்களில் இதுபோன்று பாராயணம் நடத்துவார். இதில் எந்தவிதமான அரசியல் கலப்பும் இல்லை. தீவிர ஹனுமன் பக்தர் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு கமல்நாத் ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள் அனைவரும் வீட்டில் அனுமன் பாராயணம் படிக்க கமல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
02-ஆக-202021:37:55 IST Report Abuse
Nallavan Nallavan """" தனது வாலில் தீ வைக்கப்பட்டதற்கு கோபமுற்று ஊரையே கொளுத்திய அனுமன் நிச்சயம் தீவிரவாதியாகத்தான் இருக்கணும் """" -ன்னு இவராகவே முடிவுக்கு வந்து, தீவிரவாதப் பற்று காரணமா பூஜை பண்ணிட்டாரு போலிருக்கு ..... காங்கிரசின் குணம் அப்படி ........
Rate this:
Cancel
YesJay - Chennai,இந்தியா
02-ஆக-202020:43:35 IST Report Abuse
YesJay முழுசா மாறிட்டான்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
02-ஆக-202019:52:14 IST Report Abuse
unmaitamil அடுத்து சுடலை குடும்பத்துடன் பழனிக்கு காவடி தூக்கும் நாள் விரைவில் வரும். இதைத்தான் அன்றே சோ அவர்கள் சொன்னார்கள். இந்துக்கள் ஒற்றுமை என்றும் நன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X