பொது செய்தி

இந்தியா

வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020
Share
Advertisement
Centre, Coronavirus, Corona, Covid-19, Export Of Ventilators, COVID-19 Death Rate,

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் இருந்து வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு, கொரோனா தொற்று குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் குழு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதையடுத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.15 சதவீதமாக உள்ளது. இதன்பொருள், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பது என்பதாகும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 0.22 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான கூடுதல் நடவடிக்கைகளுக்காக இந்த முடிவு வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இப்போது வென்டிலேட்டர்களின் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு வென்டிலேட்டர்கள் வெளிநாடுகளில் புதிய சந்தைகளை கண்டறிய முடியுமென நம்பப்படுகிறது. தற்போது வென்டிலேட்டர்களின் உள்நாட்டு உற்பத்தி திறனில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், தற்போது உள்நாட்டில் 20க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள், வென்டிலேட்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்கு உள்நாட்டில் வென்டிலேட்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகையான வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மார்ச்.24ம் தேதி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X