பொது செய்தி

தமிழ்நாடு

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020
Share
Advertisement
சென்னை வானிலை, மழை, மாவட்டங்கள், Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை : தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்து8 மணி நேரத்தில், திருவள்ளூர், வேலூர், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.


latest tamil news




மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 6ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மஹாராஷ்டிரா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X