பொது செய்தி

இந்தியா

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளதாவது :'கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், சோதனை செய்து பார்த்தேன். பரிசோதனை அறிக்கை மீண்டும்
Amit Shah, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, அமித்ஷா, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளதாவது :'கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், சோதனை செய்து பார்த்தேன். பரிசோதனை அறிக்கை மீண்டும் நேர்மறையாக வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


latest tamil news
அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வர பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

பா.ஜ., மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்ரமணியசுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,'கொரோனா தொற்று பாதிப்பால் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென ஊடகங்களில் வரும் செய்தியை கேட்டு வருத்தமடைகிறேன். அவர் விரைவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆக பிரார்த்தனை செய்கிறேன் 'என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRSwamy - New York,யூ.எஸ்.ஏ
02-ஆக-202023:47:19 IST Report Abuse
PRSwamy விரைவில் நீங்கள் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்
Rate this:
Cancel
குசும்புகாரன் - Tamildadu,இந்தியா
02-ஆக-202022:01:21 IST Report Abuse
குசும்புகாரன் Get well soon Sir.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
02-ஆக-202022:00:49 IST Report Abuse
Priyan Vadanad இரும்பை கரையான் அரிக்க முடியாது. நெருப்பை விட்டில் அணைக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X