கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்: தொடர் சிகிச்சையில் அபிஷேக்!| Amitabh Bachchan tests coronavirus negative, discharged from hospital: Abhishek Bachchan | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்: தொடர் சிகிச்சையில் அபிஷேக்!

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
amitabh bachchan, abhishek bachchan, Corona, Coronavirus, Corona, Covid-19, tests negative, big b, bachchan

மும்பை : கொரோனாவிலிருந்து பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மீண்டு, வீடு திரும்பிவிட்டார். அவரது மகன் அபிஷேக் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஜூலை 11-ம் தேதி இரவு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அபிஷேக்கின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விரைவாக குணமடைந்த ஐஸ்வர்யாவும், ஆரத்யாவும் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். தொடர்ந்து அமிதாப்பும், அபிஷேக்கும் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர்.


latest tamil news




இந்நிலையில் தற்போது அமிதாப் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதனை அவரது மகன் அபிஷேக் அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.வீடு திரும்பிய அமிதாப் ஓய்வில் இருந்து வருவதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலால் அமிதாப் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அபிஷேக் மட்டும் மருத்துவமனையில் தங்கி கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரும் குணமாக வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.


அமிதாப் நன்றி

சமூகவலைதளத்தில் அமிதாப் வெளியிட்ட பதிவு: ''இன்று(ஆக.,2) எனக்கு கொரோனா பரிசோனை மேற்கொண்டனர். அதில் நெகட்டிவ் என வந்தது. இதனால் மருத்துமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். எனது அறையில் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளேன். கடவுளின் அருளாலும், அன்பான நண்பர்கள், ரசிகர்களின் வேண்டுதல் மற்றும் மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொண்ட டாக்டர்கள், செவிலியர்களால் தான் குணமாகி உள்ளேன். உங்கள் அனைவருக்கும் எனது இருகரம் கூப்பி நன்றி சொல்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X