பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு 14 நாள் தனிமை கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சகம்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வெளிநாடு,  பயணிகள், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:


கிளம்புவதற்கு முன்


1. கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர், சுய அறிவிப்பு படிவத்தை ஆன்லைனில் (www.newdelhiairport.in)அனைத்து பயனாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

2. 14 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்துதல் செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். அதில் 7 நாட்கள் சொந்த செலவில் முகாமிலும், 7 நாடுகளில் வீட்டிலும் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.

3. கர்ப்பிணி, குடும்ப உறுப்பினர் மரணம் உடல்நலக்குறைவு, 10 வயது வரை உள்ள குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்தப்படுவார்கள்.

4. இந்த சலுகையை பெறுவதற்கு, கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முடிவை அரசு பரிசீலனை செய்து அறிவிக்கும்.

5. சொந்த ஊர் திரும்பியதும், ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவை காண்பித்து முகாமில் தனிமைபடுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாம். அந்த பரிசோதனையை, கிளம்புவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் எடுத்து, ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், அந்த சான்றிதழின் உறுதித்தன்மைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் பொய் என கண்டுபிடிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில், சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


latest tamil news



latest tamil news





விமானத்தில் ஏறுவதற்கு முன்னர்



1. பயணத்திற்கு முன்னர் டிக்கெட்டுடன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விளக்கும் குறிப்புகள் வழங்கப்படும்.

2. அனைத்து பயணிகளும், மொபைலில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுரை வழங்கப்படும்.

3. கப்பல் மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், தெர்மல் ஸ்கிரீனிங் செய்து, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

4. தரைவழியாக பயணம் செய்பவர்களுக்கும் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும். அதில் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, இந்தியாவிற்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

5. விமான நிலையத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

6. விமான நிலையத்திலும், விமானத்தில் ஏறும்போதும், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.


பயணத்தின் போது


1. ஆன்லைனில், சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்காதவர்கள், கப்பல், விமானத்தில் அந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்

2. கப்பல் மற்றம் விமானத்தில் பயணத்தின் போது, மாஸ்க்அணிதல், சுற்றுப்புற தூய்மை, உடல் மற்றும் கைகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அதுனை ஊழியர்கள் கண்காணிப்பார்கள்.


பயணத்திற்கு பின்


1. வெளியே வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து வர வேண்டும்

2. விமான நிலையம், துறைமுகங்களில், சுகாதார பணியாளர்கள், தெர்மல் பரிசோதனை மேற்கொள்வார்கள். சுய அறிவிப்பு படிவத்தை சுகாதார பணியாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.

3. பரிசோதனையில் அறிகுறி காட்டப்படும் நபர்கள் உடனடியாக, முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

4. முகாமில் தனிமைபடுத்துவதற்கு விலக்கு பெற்றவர்கள், தெர்மல் பரிசோதனைக்கு முன்னர் அதிகாரிகளிடம், விளக்கி, வீடுகளுக்கு செல்வதற்கு முன் அந்த சான்றிதழை மொபைல் மூலம் காட்ட வேண்டும்.

5. மற்ற பயணிகள், மத்திய/ மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்

6. முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள், 7 நாட்கள் தங்கியிருக்கவேண்டும். அவர்களுக்கு ஐசிஎம்ஆர் பரந்துரைப்படி பரிசோதனை செய்யப்படும்.

i)பரிசோதனையில், கொரோனா உறுதி செய்யப்பட்டால்,
அ) ஒருவர் அறிகுறி இல்லாமலோ/ மிகவும் லேசான பாதிப்புடன் இருந்தால், அவர்கள் வீட்டில் அல்லது கொரோனா மையத்தில் தனிமைபடுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.

ஆ) லேசான/ மத்தியமான/ தீவிரமான பாதிப்பு இருந்தால் அவர்கள் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

ii)கொரோனா இல்லை என்பது உறுதியானால்,
அவர்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

7. தனிமைபடுத்தப்பட்ட காலத்தில், ஏதேனும் அறிகுறி தென்பட்டால், அவர்கள், மாவட்ட/ மாநில அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
02-ஆக-202023:11:26 IST Report Abuse
Bismi குழப்பமான தகவல்கள் மற்றும் ஊருக்கு ஊர் மாறுபட்ட கட்டுப்பாடுகள், பிரயாணிகளை அவதிக்குள்ளாக்குகிறது. இவனுக எல்லாம் யோசிக்கவே மாட்டானுகளா?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202021:08:07 IST Report Abuse
மலரின் மகள் கர்பிணிப்பெண்கள், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் தனிமைப்படுத்தும் முகாம்கள் அல்லது ஓட்டல்கலில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை. விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களது வீடுகளில் தனித்திருக்கலாம். ஆனால் இது ஒருபுறம் இருந்தாலும் இ பாஸ் நிச்சயம் தேவை தமிழகத்தில் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு. விண்ணப்பித்தால் கிடைக்காது என்பது பலரின் அனுபவம். வெளிநாடுகளிலிருந்து வந்து இறங்கியதை காண்பித்து கார்பொரேஷனில் கொடுத்த அனுமதி சீட்டை வைத்து விண்ணப்பித்தும் இ பாஸ் கிடைக்கவில்லை என்பது நாங்கள் நேரடியாக உணர்ந்தது. ஏறத்தாழ ஒரு மாத காலமாகிறது நாங்கள் தாயகம் திரும்பி. அந்த அனுபவம் இங்கே குழப்பமானதாகவும், வெளிநாடுகளிலிருந்து திரும்பும்போது மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202021:03:48 IST Report Abuse
மலரின் மகள் இந்த மாதம் முழுவதும் அனுமதியில்லை என்று ஒரு அறிக்கை. அடுத்ததாக வரும் எட்டாம் தேதிமுதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று வேறு ஒரு செய்தி ஆங்கில பத்திரிகைகளில் குழப்பமாக வருகிறது. ஹரியானா மாநிலத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு வெறும் தெர்மல் ஸ்க்ரீனிங் மட்டுமே செய்கிறார்கள் என்று எனது தோழி சவிதா சொல்கிறார். தமிழகத்தில் தான் அதிக பட்ச கட்டுப்பாடுகளும் அனுமதியின்மையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X