பீகார் சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பாட்னா: கொரோனா பரவல், வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் பீகார் சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளன.



latest tamil news


\பீகார் சட்டசபையின் காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து மாநில கட்சிகளிடம் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் கருத்து கேட்டிருந்தது. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ., தவிர அனைத்து கட்சிகளும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளன.

கொரோனா பரவல் மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தேர்தல் வேண்டாம் என்று பா.ஜ., கூட்டணிகட்சியான லோக் ஜனசக்தியும் கருத்து தெரிவித்துள்ளது. காங்., ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியும் தேர்தலை தள்ளி வைக்க கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தேர்தல் சம்பந்தப்பட்ட வேலைகளை தொடங்காத நிலையில் பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சிகள் தேர்தல் வேலையில் இறங்கி உள்ளன.


latest tamil news



தற்போது பீகாரில் கொரோனாவால் மொத்தம் 54 ஆயிரத்து 508 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை வடமாவட்டங்களில் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202020:20:42 IST Report Abuse
kulandhai Kannan It is better to postpone Bihar elections to February next year and prepone TN, Kerala, West Bengal and Assam elections to coincide with the same.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X