கேரள முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மத்திய இணையமைச்சர் உண்ணாவிரதம்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: கேரள முதல்வர் பினாராயி விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மத்திய வெளியுறவு இணையமைச்சர் ஞாயிறன்று (ஆக.2) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.



latest tamil news




கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பா.ஜ., அமைச்சரான வி.முரளீதரன், அண்மையில் கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயன் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். டில்லியில் உள்ள தனது அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிறன்று (ஆக.;02) மேற்கொண்டார்.

இது குறித்து அமைச்சர் வி முரளீதரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ' இது வெறும் கடத்தல் விவகாரம் மட்டுமல்ல. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை. தங்கக் கடத்தில் விவகாரத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கும் பணம் போவதாக கூறப்படும் நிலையில் முழுமையான விசாரணை நடத்துவதற்கு வசதியாக மாநில முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் ' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news



ஏற்கனவே பா.ஜ., கட்சியனர் சனியன்று (ஆக.1) பினராய் விஜயனுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். காங்., கட்சியனரும் கடந்த புதன்கிழமையிலிருந்து பிரனராய் விஜயனுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. .

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
03-ஆக-202007:16:05 IST Report Abuse
Balasubramanian Ramanathan இது தமிழ் நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம். தமிழர் உரிமையை பறிக்கும் செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X